மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு


மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
x

மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயதை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்றது. அப்போது மாற்றுத் திறனாளிகள் நலத் துறை , சமூக நலன் மற்றும் மக்களின் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அந்தவகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் பெறும் வயது 50 லிருந்து 40 ஆக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெறும் வயது 50 லிருந்து 40 ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Next Story