மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு குறைப்பு
x

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து

மேட்டூர்,

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத தாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது.

மேட்டூர் அணையை பொறுத்தவரை நேற்று விநாடிக்கு 885கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 896 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 8,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீர் தேவை குறைந்துள்ளதால், நேற்று பிற்பகல் முதல் நீர்திறப்பு 6,000 கன அடியாக குறைக் கப்பட்டது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து

வருகிறது. நேற்று 104.60 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 104.21அடியாக சரிந்தது.


Next Story