காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு


காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு
x

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

ஈரோடு

பவானிசாகர்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மொத்தம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிக்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 68.98 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,839 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Next Story