காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு


காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
x

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசனத்தின் தேவைக்கேற்றவாறு தண்ணீர் அதிகரித்தோ குறைத்தோ மாறி மாறி திறந்து விடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 4-ந் தேதி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த தண்ணீர் திறப்பு கடந்த 5-ந் தேதி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது டெல்டா பாசன பகுதிகளில் மழை ஆங்காங்கே பரவலாக பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணை நீர் இருப்பு குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 140 கனஅடியாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.54 அடியாக இருந்தது.


Next Story