முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு குைறக்கப்பட்டுள்ளது.
தேனி
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.05 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 105 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,055 கனஅடியிலிருந்து, வினாடிக்கு 967 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:-
தேக்கடி 3.4, கூடலூர் 2, சண்முகா நதி அணை 3.2, உத்தமபாளையம் 1.4, வீரபாண்டி 3, வைகை அணை 0.8, சோத்துப்பாறை 7, போடி 6.4, பெரியகுளம் 4.
Related Tags :
Next Story