'தினத்தந்தி' செய்தி எதிரொலி


தினத்தந்தி செய்தி எதிரொலி
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பு சாலையை கடக்க மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பள்ளி நேரங்களில் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

அதன் எதிரொலியாக நேற்று காலை எஸ்.பி.ஏ.அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி செய்த காட்சி. எப்போதும் பள்ளி நேரங்களில் மட்டும் இங்கு நிரந்தரமாகவே ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

1 More update

Next Story