வேளாங்கண்ணி பாதயாத்திரை: விபத்தை தடுக்க பக்தர்களின் பைகளில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்


வேளாங்கண்ணி பாதயாத்திரை: விபத்தை தடுக்க பக்தர்களின் பைகளில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்
x

வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பைகளில், விபத்தை தடுக்கும் வகையில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.

காரைக்கால்:

வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பைகளில், விபத்தை தடுக்கும் வகையில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை, காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துவக்கி வைத்தார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொரோனா காரணமாக, 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருப்தால், பல்வேறு மாநிலங்களிலிருந்து, காரைக்கால் வழியாக திரளான பக்தர்கள் கூட்டம் சென்ற வண்ணம் உள்ளனர்.

இரவு நேரத்தில் சாலையோரம் நடந்து செல்லும்போது, வாகனங்கள் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில், காரைக்கால் போக்குவரத்துத் துறை போலீசார், பக்தர்கள் முதுகில் மாட்டியிருக்கும் பையில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

இந்நிகழ்ச்சியை காரைக்கால் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு நிதின் கௌஹால் ரமேஷ் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டின் பால் மற்றும் போலீசார் ஸ்டிக்கர்களை ஒட்டினர்.


Next Story