முதல் தகவல் அளிப்பவர்களுக்கான புத்தாக்க பயிற்சி


முதல் தகவல் அளிப்பவர்களுக்கான புத்தாக்க பயிற்சி
x

சோளிங்கரில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் முதல் தகவல் அளிப்பவர்களுக்கான புத்தாக பயிற்சி தாசில்தார் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமுக நலத்திட்ட தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் விபத்து, தீ விபத்து, கட்டிடங்களில் சிக்கி உயிருக்கு போராடும் நபர்களுக்கு முதலுதவி அளிப்பது, விபத்துகள் குறித்து முதல் தகவல் அளிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். மேலும் பேரிடர் காலங்களில் தகவல் அளிக்க பயிற்சி பெற்ற நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்கள். பேரிடர் குறித்து மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

காவல்துறை, மருத்துவத்துறை, கால்நடைத்துறை, தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து தெரிவித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இளங்கோவன், சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜகோபால், சிவசங்கரி மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story