ஊராட்சி தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி


ஊராட்சி தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானையில் ஊராட்சி தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

ராமநாதபுரம்

திருவாடானை,

திருவாடானையில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி 2 நாட்கள் நடைபெற்றது. யூனியன் கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.. மாவட்ட வளமைய ஒருங்கிணைப்பாளர் சிவகாமி முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மேகலா தொடங்கி வைத்தார். இதில் திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்றுநர்கள் ஜெயந்தி, ராஜேஸ்வரி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story