செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பள்ளி பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்


செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து  பள்ளி பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து தேனியில் பள்ளி பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

தேனி

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இவ்வாறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பஸ்களின் பயண தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் இந்த பஸ்களின் பயணத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story