இந்திய தர நிலைகள் குறித்துவிழிப்புணர்வு பயிற்சி வகுப்பு


இந்திய தர நிலைகள் குறித்துவிழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 1:06 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தர நிலைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தர நிலைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். தரமான பொருட்களை தயாரிப்பதில் இந்திய தர நிர்ணய பணியகம் (பி.ஐ.எஸ்.), இந்திய தர நிர்ணய நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) போன்றவற்றின் பங்கு, தர நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், இந்திய தர நிர்ணய பணியக மதுரை கிளை இணை இயக்குனர் ஸ்ரீமதி ஹேமலதா பணிக்கர் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story