வட்டாரகுழு விளையாட்டு போட்டிகள்: தண்டுபத்து அனிதா குமரன் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை


வட்டாரகுழு விளையாட்டு போட்டிகள்: தண்டுபத்து அனிதா குமரன் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:46 PM GMT)

வட்டாரகுழு விளையாட்டு போட்டிகள்: தண்டுபத்து அனிதா குமரன் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை

தூத்துக்குடி

உடன்குடி:

மெஞ்ஞானபுரத்தில் நடைபெற்ற வட்டார குழு விளையாட்டு போட்டியில் தண்டுபத்து அனிதா குமரன் பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

மாணவர்கள் சாதனை

மெஞ்ஞானபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்ட இறகு பந்தாட்டம் இரட்டையர் பிரிவில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் 2-ம் இடமும், வளைபந்து ஒன்றையர் பிரிவில் முதலிடமும், இரட்டையர் பிரிவில் முதல் இடமும் பெற்றனர். மேலும், கால்பந்தாட்டத்தில் 2-ம்இடமும், கேரம் இரட்டையர் பிரிவில் 2-ம் இடமும், கால்பந்தாட்டத்தில் முதலிடமும், வளைகோல் பந்தாட்டத்தில் 2-ம் இடமும் பெற்றனர். 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் இறகு பந்தாட்டம் இரட்டை பிரிவில் முதலிடம், ஒற்றையர் பிரிவில் முதலிடமும், வளைபந்து ஒற்றையர் பிரிவில் முதலிடமும், கைப்பந்தாட்டத்தில் 2-ம் இடமும் பெற்றனர்,

19 வயதிற்கான போட்டியில், இறகு பந்தாட்டம் இரட்டையர் பிரிவில் 2ம் இடமும், ஒன்றயர் பிரிவில் 2ம் இடமும். கைப்பந்தாட்டத்தில் முதலிடம், கேரம் ஒன்றயர் பிரிவில் முதலிடமும், பூப்பந்தாட்டத்தில் 2ம் இடமும் பெற்றனர்.

மாணவியர் முதலிடம்

மாணவிகளுக்கான போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட இறகு பந்தாட்டம் இரட்டையர் பிரிவில் முதலிடமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் இறகுபந்தாட்டம் இரட்டையர் பிரிவில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் முதலிடம், வளையபந்து ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம், கைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம், கேரம் இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பெற்றனர். பூப்பந்தாட்டத்தில் 2-ம் இடம் எறிபந்தாட்டத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் வளையபந்து ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் இடமும் கைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பூப் பந்தாட்டத்தில் 2-ம் இடமும், எறி பந்தாட்டத்தில் 2-ம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

பாராட்டு

சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி ஆலோசகர் பேராசிரியர் ஆழ்வார், நிர்வாக அதிகாரி கண்ணபிரான், முதல்வர் மீனா, துணை முதல்வர் சாந்தி ஜெயஸ்ரீ, உடற்கல்வி ஆசிரியர்கள் குருநாதன், மரியகலீல், நிஷா, சாமுவேல் ராஜ், கிறிஸ்டோபர் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story