புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி கூறினார்.
சென்னை தொழிலாளர் ஆணைய முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆகியோரின் உத்தரவின் பேரில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை அந்நிறுவனத்தின் உாிமையாளர்கள் எவ்வித விடுபடுதலுமின்றி www.labour.tn.gov.in/ism என்ற இணையதள முகவரியில் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் புதிதாக உள்ளீட்டு முகவரியினை (யூசர் ஐ.டி.) உருவாக்கி அதன் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடமோ அல்லது திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04175- 232830 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்துள்ளார்.