விவசாயிகளுக்கு பதிவு சான்று


விவசாயிகளுக்கு பதிவு சான்று
x

விவசாயிகளுக்கு பதிவு சான்று வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்பு பதிவு சான்று வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் பாப்பாத்தி முன்னிலை வகித்தார்.

முகாமில் 100 விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு பதிவு சான்றுகளை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் வழங்கினார். தொடர்ந்து உழவர் சந்தை விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story