சுல்தான்பேட்டையில் ரேக்ளா போட்டி-வெற்றிபெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பரிசு வழங்கினார்

சுல்தான்பேட்டையில் ரேக்ளா போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பரிசு வழங்கினார்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், ரேக்ளா பந்தயப்போட்டி செஞ்சேரிமலையில் நடந்தது. இதற்கு சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் எம்.கே.முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 700 -க்கும் மேற்பட்ட காளைகள் பல்வேறு இடங்களில் இருந்து கலந்து கொண்டன. 200 மீட்டர், 300 மீட்டர் என நடந்த பந்தயத்தில் காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதனை சாலையில் இரண்டு பக்கம் திரண்டு இருந்த பொது மக்கள் கண்டு களித்தனர்.
இதனைதொடர்ந்து வெற்றிபெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்கள் மற்றும் பரிசு கோப்பைகளை முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் வழங்கினர். இதில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சக்திவேல், வட்டார அட்மா தலைவர் மந்தராசலம், செஞ்சேரிபுத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.கே.டி.பழனிச்சாமி, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் சரிதாவீரமுத்து, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பி.என்.வேலுச்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி, ஒன்றியதுணை செயலாளர் ஜே.வி.எம்.மணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தண்டபாணி, வக்கீல் மணிகண்டன், என்.மகேஷ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.






