காணாமல் போன வாலிபரை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் மறியல்


காணாமல் போன வாலிபரை  கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் மறியல்
x

கீழ்க்கொடுங்காலூர் அருகே காணாமல் போன வாலிபரை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

கீழ்க்கொடுங்காலூர் அருகே காணாமல் போன வாலிபரை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசிைய அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் தேவன் (வயது 24). இவர் செய்யாறு சர்க்கரை ஆலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தேவன் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

அவரை குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே விளாங்காடு கிராம கூட்டுச்சாலை அருகே தேவனின் இருசக்கர வாகனம், செல்போன் இருந்தன. அருகில் அவர் அணிந்திருந்த செருப்பு ரத்தக் கரையுடன் காணப்பட்டது.

இது குறித்து தேவனின் உறவினர்கள் கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் போலீசார் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேவனை உடனடியாக கண்டுபிடித்து தரக்கோரி வந்தவாசியிலிருந்து மேல்மருவத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கீழ்க்ெகாடுங்காலூர் கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் பொதுமக்களும் உறவினர்களும் தற்காலிகமாக சாலை மறியலை விலகிக் கொள்வதாக கூறி கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி- மேல்மருவத்தூர் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story