கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர்

கோவையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆட்டோ டிரைவர் கொலை

கோவை வீரையம்பாளையம் காந்தி வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி. இவர் காளப்பட்டி நேருநகரில் தனது நண்பருடன பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது விருதுநகர் மாவட்டம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த பூமாலை ராஜா (வயது23) என்பவர் ரவி மீத பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் ரவி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பூமாலை ராஜாவை கைது செய்தனர்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று வீரியம்பாளையத்தை சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் ரவியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

அப்போது ரவியின் தாயார் திடீரென்று மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். இதையடுத்து முற்றுகையிட்ட ரவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பிறகு அவர்கள் அளித்த புகாரில், லோடு ஆட்டோ டிரைவர் ரவி மீது பூமாலை ராஜா என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. ரவி இல்லாத நிலையில் அந்த குடும்பம் வாழவழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

எனவே ரவியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story