உறவினர்கள் சாலைமறியல்


உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 29 July 2023 1:00 AM IST (Updated: 29 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:-

அரூரை அடுத்த பழைய கொக்கராப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது39), மாற்றுத்திறனாளியான இவர் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பழனிவேல் மனைவி சுகுணா போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், தொகுப்பு வீடு கேட்டு என்னுடைய கணவர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுகொடுத்தார். அதற்கு ஊராட்சி நிர்வாகம் தரப்பில் எந்தவொரு பதிலும் இல்லை. இதனால் மனவேதனை அடைந்த என்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளியின் உறவினர்கள் நேற்று கச்சேரி மேட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story