இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்


இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்
x

விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்ததற்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகன் வீரமுத்து (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பொன்னேரி சிதம்பரம் மெயின் ரோட்டில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சென்ட்ரிங் பலகையை தூக்கும் போது அங்கிருந்த மின் கம்பியில் சென்ட்ரிங் பலகை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் வீரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளி வீரமுத்து குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அவரது உறவினர்கள் நேற்று மதியம் விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாற்றின் பாலத்தின் நடுவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story