தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x

தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்திருவெறும்பூர் திடீர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதன் மகள் ரூபசவுந்தரி (வயது 17). பிளஸ்-2 முடித்து விட்டு, கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்தார். காது வலி பிரச்சினைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ரூபசவுந்தரியின் வலது காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அந்த மாணவியின் உடல் நிலை பாதிப்படைந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.

இந்நிலையில் மாணவியின் இறப்புக்கு அந்த தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சைதான் காரணம் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர், அந்த தனியார் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காது வலிக்கு வந்த மாணவிக்கு தவறான சிகிச்சையளித்ததால் இறந்துவிட்டார். மாணவியின் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும். தவறான சிகிச்சையளித்த மருத்துவரை கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story