நிவாரணம் கேட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்


நிவாரணம் கேட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
x

காரியாபட்டி அருகே தனியார் பஸ் டிரைவர் இறந்தார். அவரது உறவினர்கள் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே தனியார் பஸ் டிரைவர் இறந்தார். அவரது உறவினர்கள் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிரைவருக்கு நெஞ்சுவலி

காரியாபட்டி அருகே மீனாட்சிபுரத்திலிருந்து அ.முக்குளம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி இறக்குவதற்காக தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் டிரைவராக காரியாபட்டி அருகே நாகனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (வயது41). என்பவர் இருந்தார்.

இவர் தினமும் தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி இறக்கி வந்தார். இந்நிலையில் பஸ் இயக்கி கொண்டிருக்கும்போது ராஜாராமுவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ராஜாராமை காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆர்ப்பாட்டம்

அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாராம் உயிரிழந்தார். உயிரிழந்த ராஜாராம் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை ஏற்றிவந்த தனியார் பஸ்களை மறித்து ராஜாராமின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story