'நெட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு


நெட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
x

‘நெட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.

சென்னை,

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை பெறுவதற்கும் 'நெட்' தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களே உதவி பேராசிரியர்களாக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகையை பெறவும் முடியும்.

அந்த வகையில் இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2 முறை கணினி வாயிலான தேர்வாக நடத்துகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 10-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது.

இந்த தேர்வில் முதல்கட்டமாக நடத்தப்பட உள்ள 57 பாடங்களின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மீதம் உள்ள பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணை, ஹால்டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படப்படும் என்றும், கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story