ஆரணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை


ஆரணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
x

இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது.

திருவள்ளூர்,

ஆந்திர மாநிலம் - சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்த்தேக்கம் உள்ளது. இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது. நீர்த்தேக்கத்தின் முழு நீர்மட்ட அளவு 281 அடியாகும். தற்போது நிலவரப்படி நீர் இருப்பு 277 அடியாக உள்ளது.

பருவ மழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஆரணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது. எனவே ஆரணியாறு நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஆந்திர தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு மாலை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊத்துக்கோட்டை தாராட்சி, கீழ்சிட்ரபாக்கம், மேல்சிட்ரபாக்கம் பேரண்டூர். 43-பனப்பாக்கம், பாலவாக்கம், இலட்சிவாக்கம். சூளைமேனி. காக்கவாக்கம், சென்னாங்கரணை, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், செங்காத்தா-குளம், பெரியபாளையம், பாலீஸ்வரம், நெல்வாய், மங்களம், ஆர்.என்.கண்டிகை, ஏ.என்.குப்பம். மேல்முதலம்பேடு கீழ்முதலம்பேடு அரியந்துறை, கவரைப்பேட்டை பெருவாயல், எலியம்பேடு. பெரியகாவணம், சின்னகாவணம், பொன்னேரி தேவனஞ்சேரி. இலட்சுமிபுரம், லிங்கப்பையன் பேட்டை கம்மவார்பாளையம் பெரும்பேடு வஞ்சிவாக்கம், பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவெள்ளவாயல் ஒன்பாக்கம், பிரளயம்பாக்கம், போளாச்சி, அம்மன்குளம், போந்தவாக்கம், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வடதில்லை. மாம்பாக்கம், கல்கட்டு, மாளந்தூர், தொளவேடு, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு, ராள்ளப்பாடி, ஆரணி, புதுவாயல், துரைநல்லூர், வைரவன் குப்பம், வெள்ளோடை பொன்னேரி, ஆலாடு கொளத்தூர், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்திமாஞ்சேரி, வேலூர், ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி,காட்டூர், கடப்பாக்கம்: சிறுப்பழவேற்காடு ஆண்டார்மடம், தாங்கல்பெரும்புலம் ஆகிய இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 More update

Next Story