ஸ்ரீமதி மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப்பில் வீடியோக்கள் வெளியீடு - மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்


ஸ்ரீமதி மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப்பில் வீடியோக்கள் வெளியீடு - மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்
x

மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி,

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகியது.

இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டது தொடர்பாக மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் அவதூறாக கருத்து பதிவிட்ட யூடியூப் சேனல்களை முடக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story