மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி
அம்பை:
பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை பெருங்கால் மதகு மூலம் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று நேற்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, பொதுப்பணித்துறை என்ஜினீயர் மாரியப்பன், உதவி என்ஜினீயர்கள் முருகன், மகேஸ்வரன், அம்பை தாசில்தார் விஜயா, வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி ஆகியோர் மணிமுத்தாறு பெருங்கால் மதகில் தண்ணீர் திறந்து விட்டனர். நேற்று முதல் 144 நாட்கள் வரை தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் அம்பை வட்டாரத்தில் சுமார் 2,800 ஏக்கர் பாசன வசதி பெறும்.
Related Tags :
Next Story