தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி சிவக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்


தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி  சிவக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
x

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சிவக்குமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்

விழுப்புரம்

மயிலம்,

மயிலம் அருகே அவ்வையார்குப்பம் கிராமத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சுகுணா என்பவருடைய கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட சுகுணாவின் குடும்பத்துக்கு வேட்டி- சேலை, அரிசி, பாய், தலையணை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார். அப்போது பா.ம.க. மயிலம் ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் செங்கேனி, கோபால் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story