திருநாவலூர் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
திருநாவலூர் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
திருநாவலூர் ஒன்றியம் பெரும்பட்டு கிராமத்தை சேர்ந்தவா் குணசேகரன். இவரது கூரை வீடு தீவிபத்தில் எரிந்து சேதமானது. இது பற்றி தகவல் அறிந்த பா.ம.க. முன்னாள் மாவட்ட தலைவர் பேரங்கியூர் ராமமூர்த்தி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது சொந்த செலவில் அரிசி, வேட்டி, சேலை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது பெரும்பட்டு வீரன்.சக்திவேல், பெரியசெவலை கோபி மற்றும் பா.ம.க.நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story