மீனவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி
கடலில் மீன்பிடித்த போது இறந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
திசையன்விளை:
உவரி அருகே கூட்டப்பனையைச் சேர்ந்தவர் எமர்சன் (வயது 39). மீனவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு நேற்று கூட்டப்பனையில் உள்ள எமர்சனின் வீட்டுக்கு சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.
மேலும் எமர்சனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்வதாகவும், அவரது 3 குழந்தைகளையும் தனது சொந்த செலவில் படிக்க வைக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story