மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி


மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
x

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்டது

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் மற்றும் கடலங்குடி, கண்டியூர், தொழுதாலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் கனகசபை தலைமை தாங்கினார். செயலாளர் கிருபாகரன், பொருளாளர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் இந்திய செஞ்சிலுவை சங்க மயிலாடுதுறை மாவட்ட கிளையை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தார்ப்பாய் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். இதில் மயிலாடுதுறை மாவட்ட கிளையை சேர்ந்த நிர்வாக குழு உறுப்பினர்கள் செல்வகுமார், பூபாலன், சுகுமார், வெங்கடேசன், அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் நாகேந்திரன் நன்றி கூறினார்.


Next Story