சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x

கிருஷ்ணகிரி சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே தர்மபுரியில் இருந்து ஆந்திராவிற்கு சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக தனியார் பஸ் பின்புறம் மோதியதில் டிராக்டரில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் சவுளூர் நூலஅல்லி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி(வயது 55), மல்லி (50), வசந்தி(45), முத்து(22) மற்றும் 3 மாத குழந்தை வர்ஷினி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இந்த விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story