மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
நெல்லையில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லையில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நல்லிணக்க நாள்
ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி மத நல்லிணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், தேர்தல் தாசில்தார் கந்தப்பன், தாசில்தார் அபிபூர் ரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சரவணன் தலைமையில் துணை மேயர் ராஜூ, மாநகர பொறியாளர் அசோகன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்
இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, மாவட்ட குற்ற ஆவணக்காப்பக பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி மற்றும் காவல் அமைச்சு பணியாளர்கள், போலீசார் கலந்துகொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
அதே போல் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாநகர கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் சீனிவாசன் (கிழக்கு), சரவணகுமார் (மேற்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் போலீசார், அமைச்சு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்று கொண்டனர்.