30 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்


30 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 11 Feb 2023 6:46 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

போலீசார் இடமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சமீபத்தில் எருது விழா நடத்த அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனிடையே மாவட்டத்தில் 30 தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பணி இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக புதிதாக 30 பேர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று அந்தந்த போலீஸ் நிலையங்களில் பொறுப்பேற்று கொண்டனர்.

அதன்படி, ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தலைமை காவலர் ஜெயவேல், மத்தூர்- முருகேசன், சிங்காரப்பேட்டை- அன்பழகன், கல்லாவி-அதியமான், சாமல்பட்டி- பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி தாலுகா-அல்லாவுதீன், கிருஷ்ணகிரி டவுன்- உதயகுமார், கே.ஆர்.பி.டேம்- சரவணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கந்திகுப்பம்-பாரூர்

காவேரிப்பட்டணம்- உதயகுமார், குருபரப்பள்ளி- நவீத்பாஷா, வேப்பனப்பள்ளி - கிருஷ்ணன், மகராஜகடை- பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓசூர் டவுன்- சுரேஷ்குமார், அட்கோ- பூங்காவனம், சிப்காட்- விஜயலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று மத்திகிரி- செந்தில், பாகலூர்- அர்ச்சுனன், பேரிகை- சிங்காரம், சூளகிரி- பாக்யநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பர்கூர்- ஜேஸ்மின் மில்டன்ராஜ், கந்திகுப்பம்- கலையரசன், பாரூர்- விஜயன், நாகரசம்பட்டி- மூர்த்தி, போச்சம்பள்ளி- ஆனந்த்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேன்கனிக்கோட்டை- லட்சுமணன், தளி- விஜயகுமார், ராயக்கோட்டை- ராமச்சந்திரன், உத்தனப்பள்ளி- ராமச்சந்திரன், கெலமங்கலம்- ராஜசேகர், அஞ்செட்டி- சுதாகர் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பரபரப்பு

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது நிர்வாக காரணங்களுக்காக தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் 30 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story