சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட 3 தடுப்பு கம்பிகள் அகற்றம்


சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட 3 தடுப்பு கம்பிகள் அகற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2023 6:00 AM IST (Updated: 25 Jun 2023 6:01 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே தனியார் தோட்டத்தில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட 3 தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே பாக்கனா 10.நம்பர் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை தனியார் தோட்ட நிர்வாகம் திடீரென்று சாலையின் குறுக்கே 3 இரும்பு நுழைவு வாயில்கள் அமைத்து பூட்டுப்போட்டனர். இதனால் பாக்கனா காலனியில் வசிக்கும் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் ஆஸ்பத்திரி செல்வதற்கும் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் தமிழக முதல்-அமைச்சருக்கும், வருவாய்த்துறையினருக்கும் புகார் மனு அனுப்பினர். அதன்படி கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது ரகமத்துல்லா, பந்தலூர் தாசில்தார் நடேசன் ஆகியோர் உத்தரவின்படி வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து கர்ணன் உள்ளிட்டோர் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை அகற்றினர். அப்போது தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுபடி தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் விரைந்துசென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story