வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பு அகற்றம்


வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பு அகற்றம்
x

வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் வடக்கு கிராமம் கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-அ வாய்க்காலின் வலது கரையில் தனிநபர் ஒருவர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். இதையடுத்து கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகன், மாயனூர் நீர்வளத்துறை மற்றும் ஆற்று பாதுகாப்பு உதவி பொறியாளர் ஸ்ரீதர் ஆகியோர் அங்கு வந்து ஆக்கிரமிப்பை அகற்றினர். பின்னர் ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு எல்லைகள் காண்பிக்கப்பட்டது. அப்போது வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் உடனிருந்தனர்.

1 More update

Next Story