மரங்களில் பொருத்திய விளம்பர பலகைகள் அகற்றம்
மரங்களில் பொருத்திய விளம்பர பலகைகள் அகற்றம்
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலை தாலுகா பகுதியில் பொள்ளாச்சி-சேத்துமடை சாலை, வால்பாறை-பொள்ளாச்சி சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஏராளமான மரங்கள் உள்ளன. இவை பறவைகளின் வாழ்விடமாக உள்ளதோடு சுற்றுச்சூழலுக்கு அரணாகவும் விளங்குகின்றன. இந்த மரங்களில் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் ஆணி மூலம் அடித்து பொருத்தப்பட்டு இருந்தன. இதனால் மரங்களில் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பட்டுபோன நிலைக்கு மாறி வலுவிழக்கும் அபாயம் நிலவியது. இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழிலில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஆனைமலை-சேத்துமடை சாலையில் மரங்களில் பொருத்தப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. மேலும் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள மரங்களில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர பலகைகளும் அகற்றப்பட உள்ளன.
Related Tags :
Next Story