விராலிமலை அரசு பள்ளி அருகே பெட்டிக்கடைகள் அகற்றம்


விராலிமலை அரசு பள்ளி அருகே பெட்டிக்கடைகள் அகற்றம்
x

விராலிமலை அரசு பள்ளி அருகே இருந்த பெட்டிக்கடைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

புதுக்கோட்டை

விராலிமலை சோதனைச்சாவடி அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தின் முன்பு பெட்டிக்கடைகள் உள்ளன. அதில் மாணவர்கள் பள்ளிக்கு வரும் போதும் செல்லும்போதும் அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வாங்கி செல்கின்றனர். மேலும் பெட்டிக்கடைகளில் தின்பண்டங்கள் தவிர சிகரெட் உள்ளிட்டவை விற்கப்படுவதால் மாணவர்கள் தவறான பழக்கத்திற்கு ஆளாவதற்கு வாய்ப்புள்ளது என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து விராலிமலை நெடுஞ்சாலை துறையினருக்கு பள்ளி வளாகத்தின் அருகே உள்ள பெட்டிக்கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று காலை பள்ளி வளாகத்தின் அருகே இருந்த பெட்டிக்கடைகளை போலீசார் உதவியுடன் அகற்றினர்.

1 More update

Next Story