கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதர்கள் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த புதர் செடிகள் வெட்டி அகற்றப்பட்டன.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த புதர் செடிகள் வெட்டி அகற்றப்பட்டன.
கலெக்டர் அலுவலகம்
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கலெக்டர் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. எனவே அதன் பின்னால் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அலுவலகங்கள் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றப்பட்டது.
எனவே அங்கிருந்த பழைய கட்டிடங்களை இடித்து அகற்றப்பட்டது.
மேலும் அந்த இடம் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது.
ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த இடத்தில் புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தது.
இதனால் பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருந்தது.
புதர்கள் அகற்றம்
சில நேரங்களில் அங்கு நிறுத்தப்படும் வாகனங்களில் பாம்பு உள்ளிட்டவை அடைக்கலம் புகும் அபாயம் இருந்தது. எனவே கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள புதர் செடிகளை அகற்ற வேண்டும் என்று நேற்றுமுன்தினம் 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட் சியும் இணைந்து கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறம் இருந்த செடி கொடிகள் மற்றும் புதர்களை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நேற்று அகற்றினர்.
மேலும் அங்கு கொட்டி வைக்கப்பட்டு இருந்த குப்பைகள் மற்றும் கற்களை எடுத்து அப்புறப்படுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.