துத்திப்பட்டு ஊராட்சியில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


துத்திப்பட்டு ஊராட்சியில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

துத்திப்பட்டு ஊராட்சியில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

திருப்பத்தூர்

துத்திப்பட்டு ஊராட்சியில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் குதிரை கால்வாய் உள்ளது. இக்கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் கால்வாய் வழியாக செல்லவேண்டிய மழைநீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் துத்திப்பட்டு பகுதியில் மழைக்காலத்தில் இது தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது.

இதனால் பருவ மழைக்கு முன்பு குதிரை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று குதிரைகால்வாய் பகுதியை ஒட்டி சுமார் 35 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத நூலக கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேஷ், துணைத் தலைவர் விஜய், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.


Next Story