பெரிய ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


பெரிய ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:46 PM GMT)

பெரிய ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

பெரிய ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பொன்னியம்மன் கோவில் தெரு, போஸ்கோ நகர், தண்டபாணி கோவில் தெரு உள்ளிட்ட பெரிய ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 113 ஏக்டர் பரப்பில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த சென்னை ஜகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த நீர்ப்பிடிப்பு ஆசிரமிப்பு கடை அகற்ற முயன்ற போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 7 மணி நேரம் சாலை மறியல் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதிக்கு பிறகு அப்புறப்படுத்த முடிவெடுத்தப்பட்டது.இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்து போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது குடியிருப்பு வீடுகளை தவிர்த்து வணிகரீதியான நிறுவனங்கள் மற்றும் கடைகளை சனிக்கிழமை அப்புறப்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முழு சம்மதம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நேற்று பொதுப்பணித்துறை நீர்வளத் துறை மூலம் 5 பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறையினனர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது போலீ்ஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story