பண்ணப்பட்டி அருகே மயான ஆக்கிரமிப்பு அகற்றம்மீண்டும் கொட்டகை அமைத்ததால் பரபரப்பு
சேலம்
ஓமலூர்
ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் மயான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு, பன்றி கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை வருவாய்த்துறையினர் நேற்று மேற்கொண்டனர். இதையொட்டி தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் வீடு, கொட்டகை இடித்து அகற்றப்பட்டது.
கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்ததாக கூறிய தாசில்தார் தமிழரசி, ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடு, கொட்டகை அமைத்திருந்தவர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனிடையே நேற்று மாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் மீண்டும் கொட்டகை அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story