பண்ணப்பட்டி அருகே மயான ஆக்கிரமிப்பு அகற்றம்:மாற்று இடம் வழங்க கோரி திறந்தவெளியில் வசிக்கும் குடும்பத்தினர்


பண்ணப்பட்டி அருகே மயான ஆக்கிரமிப்பு அகற்றம்:மாற்று இடம் வழங்க கோரி திறந்தவெளியில் வசிக்கும் குடும்பத்தினர்
x
சேலம்

ஓமலூர்

ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் மயான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு, பன்றி கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் மேற்கொண்டனர். தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வீடு மற்றும் கொட்டகை இடித்து அகற்றப்பட்டது.

இந்த நிலையில் அந்த இடத்தில் வசித்து வந்த சரசு மற்றும் அவரது குடும்பத்தினர் திறந்தவெளியில் இடிக்கப்பட்ட இடத்திலேயே வசித்து வருகின்றனர். இது பற்றி அவர்கள் கூறும்போது, 'மாற்று இடம் வழங்குவதாக காடையாம்பட்டி தாசில்தார் தமிழரசி கூறியிருந்த நிலையில் இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. எனவே தாங்கள் தங்குவதற்கு இடம் இல்லாத சூழ்நிலையில் இடிக்கப்பட்ட இடத்திலேயே திறந்தவெளியில் தங்கி இருக்கிறோம்' என்றார்கள்.


Next Story