ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டை பெரியார் நகர் முதல் தெருவில் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து மண் மற்றும் அரளை கற்களை போட்டிருந்தார். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருவதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள், துவாக்குடி போலீஸ் நிலையம் மற்றும் திருவெறும்பூர் வருவாய் துறையினருக்கு புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் நேற்று திருவெறும்பூர் வருவாய் துறையினர் சிறப்பு தாசில்தார் லோகநாதன், நில அளவையர் முகமது, திருவெறும்பூர் வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர். இதையொட்டி துவாக்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.