ஆத்துரை பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ஆத்துரை பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x

ஆத்துரை பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

ஆத்துரை பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

சேத்துப்பட்டு ஒன்றியம் ஆத்துரை கிராமத்தில் பெரிய ஏரியில் கரையை ஆக்கிரமித்து 20-க்கும் மேற்பட்ட கொட்டகை மற்றும் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. மேலும் நெல், மணிலா, கரும்பும் ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டு இருந்தது.

இவற்றை அகற்றக்கோரி சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டிருந்தது. அனால் அவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.இதனையடுத்து நேற்று காலை நீர்நிலை துறை பொறியாளர் செல்வராஜ் தலைமையில் சேத்துப்பட்டு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் காதர் பாட்ஷா, சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கொட்டகை, இரண்டு மாடி வீடுகளை அகற்றி பயிர்களை அழித்தனர்.


Next Story