நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்


நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 2 Aug 2023 3:45 AM IST (Updated: 2 Aug 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் குசுமகிரியில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் குசுமகிரியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக புகார் எழுந்தது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் வந்தது. தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் நேற்று நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story