ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:30 AM IST (Updated: 14 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கோவை ரோடு உள்பட முக்கிய சாலைகள் உள்ளன. இதில் சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைக ளை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


இது குறித்து கோர்ட்டு உத்தரவின் பேரில் பொள்ளாச்சி நகரில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. பொள் ளாச்சி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பால முருகன், நகராட்சி நகரமைப்பு அலுவலர் சாந்தி நிர்மலா பாய், உதவி பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தாலுகா போலீஸ் நிலையம் எதிரே பொது மக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் நடைபாதையை ஆக்கி ரமித்து தள்ளுவண்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அதிகாரிகள் வருவதை அறிந்ததும் சிலர் கடைகளில் இருந்த பொருட்களையும், வண்டியையும் தாமாகவே அகற்றிக் கொண்டனர்.


சில ஆக்கிரமிப்பு வண்டி கடைகளை ஊழியர்கள் அகற்றி லாரி யில் ஏற்றி கொண்டு சென்றனர். பின்னர் பி.எஸ்.என்.எல். அலுவ லகம் முன் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த ஜவுளிக்கடைகள், டீக்கடைகளையும் அதிகாரிகள் அகற்றினர்.

இதேபோன்று நகரின் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய சில நாட்களிலேயே மீண்டும் நடைபாதை ஆக்கிரமிக்கப்படுகிறது.

எனவே அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து சாலை, நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



Next Story