வேலூர்-ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


வேலூர்-ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

வேலூர்-ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செய்யப்பட்டு மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர்

வேலூர்-ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செய்யப்பட்டு மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் ஆற்காடு சாலையும் ஒன்றாகும். இந்த சாலையில் உள்ள மருத்துவமனை பகுதியின் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் மோட்டார் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், அறிவழகன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தரை கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளை அதிரடியாக அகற்றினர்.

மேலும் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 28 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக ஆற்காடு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இன்றும் (புதன்கிழமை) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story