ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு நான்கு ரத வீதிகளில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது வியாபாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என போலீசாருக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம், நேதாஜி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து பெரிய கடை பஜார், ஆண்டாள் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகள், சின்ன கடை பஜார் போன்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் ஏற்பட்டால் போராட்டம் நடத்துவோம் என வியாபாரிகள் சங்கத்தினர் கூறினர்.