நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 26 Oct 2023 1:00 AM IST (Updated: 26 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பெரியாண்டிச்சி கோவில் நீரோடை உள்ளது. இந்த நீரோடை பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை (பாசனபிரிவு நீர் வளத்துறை) உதவி பொறியாளர் கிருபா தலைமையில் அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story