திண்டுக்கல்லில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திண்டுக்கல்லில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 April 2023 2:15 AM IST (Updated: 22 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகர் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதாக மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு புகார் வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாநகராட்சியின் முதுநிலை நகரமைப்பு அலுவலர் சேதுராஜன் தலைமையில் அதிகாரிகள் வெள்ளை விநாயகர் கோவில் தெரு, ஆர்.எஸ். ரோடு, அரண்மனைகுளம், நாகல்நகர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

மேலும் மாநகராட்சி அனுமதியின்றி சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் ஆகியவற்றையும் பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். மீண்டும் சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story