பஸ் நிலையம் அமையும் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
வடுகந்தாங்கலில் பஸ் நிலையம் அமையும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையையொட்டி வடுகந்தாங்கல் உள்ளது. இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக ரூ.30 லட்சத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. ஒதுக்கி உள்ளார்.
தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில் பஸ் நிலையம் அமைவதற்கான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
இந்த பணியை தாசில்தார் அ.கீதா, ஒன்றியக்குழு உறுப்பினர் லோ.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், மேலாளர் பா.வேலு, துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் சரவணன், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி ஆகியோர் பார்வையிட்டனர்.